தலைவா... ரஜினியின் தர்பார் பின்னணி இசை தொகுப்பு இதோ! பக்கா ரிங்டோன் மெட்டிரியல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தின் பின்னணி இசை தொகுப்பு வெளியாகியுள்ளது.

Rajini anirudh ar murugadoss darbar original sound track released

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் தர்பார். பொங்கலன்று வெளியான இத்திரைப்படத்தில் ரஜினி, ஆதித்ய அருணாச்சலம் என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்த இத்திரைப்படத்தில் நயன்தாரா  கதாநாயகியாகவும், நிவேதா தாமஸ், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தனர். அனிருத்தின் இசையில் சும்மா கிழி, தரம் மாறா சிங்கில் என பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தர்பார் படத்தின் பின்னணி இசை தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் வெவ்வேறு காட்சிகளில் வரும் பின்னணி இசைகளை பதினோரு ட்ராக்காக தொகுத்து இதை வெளியிட்டுள்ளார்கள். கானா இணையதளத்தில் இது வெளியாகியுள்ளது. தலைவா., சூப்பர்ஸ்டார் என ஆரம்பித்து வரும் பின்னணி இசை யாவும் ரஜினி ரசிகர்களுக்கும் அனிருத் ரசிகர்களுக்கும் பக்கா ரிங்டோன் மெட்டிரியலாக அமைந்திருக்கிறது!

Entertainment sub editor