போயஸ் கார்டனில் 'ரஜினி-தனுஷ்!'.. இணையத்தில் தீயாய் பரவும் ஃபோட்டோஸ்!.. எல்லாம் நல்ல விஷயம் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

'போயஸ் கார்டனில் ரஜினி-தனுஷ்' படங்கள் Rajini and Dhanush in Poes garden

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜின் இரண்டாவது திரைப்படமான கர்ணன் திரைப்படம், மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்து வந்தது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பற்றிய முக்கிய அப்டேட் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெளியானது.

அதன்படி வரும் ஏப்ரல் மாதம் உலகமெங்கும் கர்ணன் திரைப்படம் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் இயக்குநர் மாரிசெல்வராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வலியில் அழுவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் கர்ணன் படத்தின் டப்பிங் பேசும் பணியில் தனுஷ் ஈடுபட்டிருந்த டப்பிங் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இப்படி ட்ரெண்டிங்கில் இருக்கும் தனுஷ் பற்றிய செய்திகள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் தனுஷ் போயஸ்கார்டனில் பூமி பூஜை ஒன்றில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் வாங்கியுள்ள புதிய இடத்திற்கு பூமி பூஜை செய்யும்போதுதான் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. ஜகமே தந்திரம், கர்ணன் படங்களைத் தொடர்ந்து ஹிந்தியில் ‘அத்ரங்கி ரே’, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின்  ‘நானே வருவேன்’ படங்களை தனுஷ் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இயக்குநர் ‘வெற்றிமாறன்’ வெளியிடும் ‘சங்கத்தலைவன்’ திரைப்படம்!.. Exclusive சென்சார் அப்டேட்!’.. கதை என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

'போயஸ் கார்டனில் ரஜினி-தனுஷ்' படங்கள் Rajini and Dhanush in Poes garden

People looking for online information on Chennai, Dhanush, Pics, Rajinikanth, Viral will find this news story useful.