பிரபல சன் டிவி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை... காரணம் என்ன..?
முகப்பு > சினிமா செய்திகள்சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் தொடர் நிலா. இந்த தொடர் கடந்த 2019-ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பவித்ரா மற்றும் ஹேமந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தொடரை ஸ்ரீகாந்த் Entertainment தயாரித்து வருகின்றனர். மேலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான சமந்தா கிரன் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். பல தொடர்களில் நடித்து வரும் அவர் நிலா தொடரிலும் அஞ்சலி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். நிலா சீரியலின் போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து "அஞ்சலியை நிச்சயம் மிஸ் செய்கிறேன். இந்த புகைப்படங்கள் எல்லாமே மலரும் நினைவுகள் தான். நிலா சீரியலில் நடித்தது உண்மையிலேயே மிக சிறந்த அனுபவம். ஒரு கடினமான கதாபாத்திரம் எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியே. நிலா சீரியல் குழுவினருக்கு எனது நன்றிகள். ஆம் இனிமேல் நான் நிலா சீரியலில் இல்லை. உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.