மீண்டும் களமிறங்கிய ஷிவானி... தலைவர் பாட்டுக்கு செம டான்ஸ்... செம வைரலான வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக எதிர்பார்ப்போடு களமிறங்கிய போட்டியாளர்களுள் ஒருவர் ஷிவானி. மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் அவருக்கு இருந்தது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட அவரை 2 மில்லியன் மக்கள் ப்பாலோ செய்கின்றனர். இதற்கெல்லாம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது ஊரடங்கு போட்டோ ஷூட்கள் தான். தினமும் 4 மணிக்கு வெளியாகும் அவரது போட்டோவிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த புகைப்படங்களும் மிகவும் வைரலானது. இப்படி ஷிவானிக்கு புகழும், பேரும் வந்து சேர்ந்தது.

shivani instagram dance video goes viral மீண்டும் களமிறங்கிய ஷிவானி

அதன் பின்பு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். ஆரம்பம் முதலே அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் ஷிவானிக்கு திருப்புமுனையாக அமைந்தது, அவரது தாயின் வருகைதான். அதற்குப் பிறகு அவர் பல விஷயங்களில் தனது கருத்தை சரியாக பதிவிடுவதும், டாஸ்க்குகளில் திறமையை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஊரடங்கு போட்டோஷூட் புகைப்படங்கள் பலவும் காணாமல் போயிருக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷிவானி மீண்டும் தனது இன்ஸ்டாகிராம்மில் டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வடிவேலுவின் "வாடி பொட்ட புள்ள வெளிய" என்ற பாடலுக்கு நடனம் ஆடிய அவர் " தலைவன் பாட்டுக்கு ஆடுறதே தனி சந்தோஷம் தான்" என்று கூறியுள்ளார்.

மீண்டும் களமிறங்கிய ஷிவானி... தலைவர் பாட்டுக்கு செம டான்ஸ்... செம வைரலான வீடியோ..! வீடியோ

Tags : Shivani

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

shivani instagram dance video goes viral மீண்டும் களமிறங்கிய ஷிவானி

People looking for online information on Shivani will find this news story useful.