அவ்வை ஷண்முகி படத்தில் நடிச்ச குட்டி பாப்பாவா இது... செம வைரலாகும் பிகினி போட்டோஷுட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசனுக்கு புதுமையான படங்கள் தருவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. அப்படி 1996-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கிரேசி மோகனின் அற்புதமான வசனத்தில் உருவாக்கிய படம்தான் "அவ்வை ஷன்முகி'. Mrs. Doubtfire என்கிற ஆங்கில படத்தின் தாக்கத்தில் இந்த பாடம் உருவானது. கமல் பெண் வேடத்தில் வேற லெவலில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், ஹீரா, நாசர், மணிவண்ணன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலக்கியிருந்தனர்.

avvai shanmugi baby artist photo viral அவ்வை ஷண்முகி குட்டி பாப்பாவா இது

இந்த படத்தில் மற்றொரு குறிப்பிடக்கூடிய கதாபாத்திரம் என்றால் அது நிச்சயம் கமல்ஹாசனின் மகளாக நடித்த குழந்தையின் கதாபாத்திரம்தான். தனது சுட்டித்தனமான நடிப்பினால் அந்த குழந்தை செய்யும் ஒவ்வொரு செயல்களும் ரசிக்கும்படி இருந்தன. தந்தை கமல்ஹாசனுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் குழந்தை 90-ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பாப்புலர். அந்த குழந்தையின் பெயர் ஆன் அலெக்ஸியா ஆன்ரா.  ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. தற்போது வளர்ந்து இளம்பெண்ணாக மாறிவிட்ட போதிலும் அவருக்கு திரைப்படங்களில் ஆர்வம் வரவிலை போல. மாறாக மாடலிங் துறையிலும் அழகு போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடத்திய பிகினி போட்டோ ஷூட் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. பலரும் அவ்வை சண்முகி படத்தில் நடித்த அந்த குழந்தையை இது என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.

avvai shanmugi baby artist photo viral அவ்வை ஷண்முகி குட்டி பாப்பாவா இது

avvai shanmugi baby artist photo viral அவ்வை ஷண்முகி குட்டி பாப்பாவா இது

avvai shanmugi baby artist photo viral அவ்வை ஷண்முகி குட்டி பாப்பாவா இது

People looking for online information on Avvai Shanmugi will find this news story useful.