RRR Others USA
www.garudabazaar.com

RRR படத்துக்கு ஒரு டிக்கெட் 1500 ரூபாயா? இந்தியா முழுவதும் வெளியான OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Hydrabad & Chennai : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR திரைப்படத்தின் டிக்கெட் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Rajamouli Jr NTR Ramcharan RRR Movie Ticket Price

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Rajamouli Jr NTR Ramcharan RRR Movie Ticket Price

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.

Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR தமிழில் இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.  RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.

Rajamouli Jr NTR Ramcharan RRR Movie Ticket Price

பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம். இந்த RRR படம் நாளை (2022 மார்ச் 25ஆம் தேதி) வெளியாகிறது. 

IMAX திரைகளில் இந்த RRR படம் திரையிடப்படுகிறது. ​​அதிக வருவாயைப் பெற தயாரிப்பாளர்கள் RRR படத்தை ஐமாக்ஸில் ரீமாஸ்டர் பதிப்பில் வெளியிட முடிவு செய்துள்ளனர். IMAX திரையரங்குகளில் படம் பார்க்க மூன்று மடங்கு அதிக டிக்கெட் கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கின்றன.

Rajamouli Jr NTR Ramcharan RRR Movie Ticket Price

Rajamouli Jr NTR Ramcharan RRR Movie Ticket Price

இந்நிலையில் RRR படத்தின் டிக்கெட் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐத்ராபாத்தில் 470 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக 1450, 1250 என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி NCR பகுதியில் அதிகபட்சம் 800 ரூபாயும், மும்பையில் அதிகபட்சம் 1050 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய இணைப்புகள்

Rajamouli Jr NTR Ramcharan RRR Movie Ticket Price

People looking for online information on Jr ntr, Rajamouli, Ram Charan, RRR, RRR Movie will find this news story useful.