www.garudabazaar.com

ராம் சரண் - Jr NTR செம மாஸ் நடனத்துடன் வெளியானது RRR படத்தின் கொண்டாட்ட பாடல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Hydrabad & Chennai : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

The joyful RRR Celebration Anthem Koelae is here!

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

The joyful RRR Celebration Anthem Koelae is here!

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.

எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR தமிழில் இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. 

The joyful RRR Celebration Anthem Koelae is here!

RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம். இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 மார்ச் 25 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு RRR படத்தின் கோலே எனும் கொண்டாட்ட பாடல் வெளியாகி உள்ளது.  இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் பட்டேல், வ. உ.சிதம்பரம் பிள்ளை, பகத் சிங் ஆகியோரை அடிப்படையாக வைத்து இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடல் வரிகளை கார்க்கி எழுத, மரகதமணி இசையமைத்துள்ளார். விஷால் மிஸ்ரா, பென்னி தயாள், சாஹிதி சகந்தி, ஹரிகா நாராயண் ஆகியோர் பாடி உள்ளனர். 

ராம் சரண் - JR NTR செம மாஸ் நடனத்துடன் வெளியானது RRR படத்தின் கொண்டாட்ட பாடல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

The joyful RRR Celebration Anthem Koelae is here!

People looking for online information on Alia Bhatt, Alison Doody, Benny Dayal, Harika Narayan, Jr ntr, K.K. Senthil Kumar, Maragadhamani, Olivia Morris, Ram Charan, Ray Stevenson, RRR, S.S. Rajamouli, Sahithi Chaganti, Samuthirakani, Vishal Mishra will find this news story useful.