RRR Others USA
www.garudabazaar.com

திவ்யபாரதி அடித்த மாலத்தீவு விசிட்... தங்கியிருக்கிற ஹோட்டல் வாடகை மட்டும் இம்புட்டு ரூவாயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு:  மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை  தங்கியிருக்கும் ஹோட்டல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Divaya Bharathi at Coco Giri Island resort Maldives

கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்றுள்ள நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார். அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Divaya Bharathi at Coco Giri Island resort Maldives

Cocogiri Island Resort Maldives என்ற ஹோட்டலில் திவ்ய பாரதி தங்கியுள்ளார். கோகோகிரி தீவு ரிசார்ட்டுக்கு அருகில் உள்ள விமான நிலையம் மாலே வேலனா சர்வதேச விமான நிலையம் ஆகும்.

ஹோட்டலுக்கு விமானநிலையத்தில் இருந்து செல்ல ஒரு கடல் விமானம் மூலம் செல்ல தோராயமாக 18 நிமிடங்கள் எடுக்கும் மற்றும் ஒரு வேகப் படகு மூலம் தோராயமாக 60 நிமிடங்கள் ஆகும். கடல் சீற்றம் & வானிலை நிலைமைகள் பயண நேரத்தை பாதிக்கலாம். ஒருநாள் வாடகையாக இந்த ஹோட்டல் 15,000 முதல் 55,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

Divaya Bharathi at Coco Giri Island resort Maldives

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் தான் திவ்யபாரதி.

Divaya Bharathi at Coco Giri Island resort Maldives

தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்

திவ்யபாரதி அடித்த மாலத்தீவு விசிட்... தங்கியிருக்கிற ஹோட்டல் வாடகை மட்டும் இம்புட்டு ரூவாயா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Divaya Bharathi at Coco Giri Island resort Maldives

People looking for online information on Coco Giri Island resort, Coco Giri Island resort Maldives, Dhivya Bharathi, Divya Bharathi, Maldives will find this news story useful.