www.garudabazaar.com

மார்ச், எப்ரல்ல fans-க்கு செம்ம ட்ரீட் … விக்னேஷ் சிவன் படமும்.. அவரே பகிர்ந்த வைரல் ஸ்டேட்டஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்போது விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டுகாதல் படத்தை இயக்கியுள்ளார்.

RRR KGF2 Beast KVRK release treat vignesh shivan viral status

ஜலபுலஜங்கு பாட்டு செஞ்ச சாதனை…. சிவகார்த்திகேயன் பகிர்ந்த சர்ப்ரைஸ் வீடியோ!

விக்னேஷ் சிவனின் படங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன், சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் அவர் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்த படத்தின் போதுதான் நயன்தாராவும் விக்னேஷ் சிவன் காதலில் விழுந்தனர். இப்போது விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய் சேதுபதி நயன்தாரா கூட்டணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார். கூடுதலாக இந்த படத்தில் சமந்தாவும் நடிக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலிஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

RRR KGF2 Beast KVRK release treat vignesh shivan viral status

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஸ்டோரி ஒன்று கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை வெளியாக உள்ள முன்னணி நடிகர்களின் - ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள் பற்றிய ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அதில் ஆர் ஆர் ஆர், கேஜிஎப் 2, பீஸ்ட் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் மற்றும் அவற்றின் ரிலீஸ் தேதி உள்ளன.

ஆர் ஆர் ஆர்- மார்ச் 25

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு மார்ச் 25 ஆம் தேதி வெளியாகிறது. ராஜமௌலியின் படம் என்பதால் இந்தியா முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு உள்ளது.

RRR KGF2 Best KVRK release treat vignesh shivan viral status

கேஜிஎப் 2 – ஏப்ரல் 14

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர்.ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார்.  இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

RRR KGF2 Best KVRK release treat vignesh shivan viral status

பீஸ்ட்

பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக்குத்து பாடல் வெளியாகி 150 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு தெறி ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.  நெல்சனின் முந்தைய படமான டாக்டர் படமும், விஜய்யின் முந்தைய படமான மாஸ்டரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. அதனால் பீஸ்ட் படத்த்துக்கு ரசிகர்கள் வெயிட்டிங் மோடில் உள்ளனர்.

RRR KGF2 Best KVRK release treat vignesh shivan viral status

காத்துவாக்குல ரெண்டு காதல் – ஏப்ரல் 28

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டானிக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

RRR KGF2 Best KVRK release treat vignesh shivan viral status

வாவ்.. CWC புகழோட நடிக்குறத பத்தி.. பிரபல இளம் நடிகர் என்ன சொல்லிருக்காரு பாருங்க..

தொடர்புடைய இணைப்புகள்

RRR KGF2 Beast KVRK release treat vignesh shivan viral status

People looking for online information on ஆர் ஆர் ஆர், இயக்குனர் விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல், கேஜிஎப் 2, பீஸ்ட், Beast, KGF2, KVRK, RRR, Vignesh shivan will find this news story useful.