ET Others
www.garudabazaar.com

பாகுபலி இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம் RRR! இப்படி ஒரு திரை அனுபவமா? என்ன ஸ்பெஷல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Hydrabad & Chennai : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் குறித்த மாஸ் தகவல் வெளியாகி உள்ளது.

Experience India’s biggest action-drama RRR in IMAX

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Experience India’s biggest action-drama RRR in IMAX

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.

Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR தமிழில் இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.  RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.

பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம்.

Experience India’s biggest action-drama RRR in IMAX

இந்த RRR படம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அளிவில் பல மாநிலங்களில் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்தது, படத்தின் வசூலை பாதிக்கலாம் எனும் காரணமாக ரிலீஸ் தேதி (07.01.2022)  ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 மார்ச் 25ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது.

Experience India’s biggest action-drama RRR in IMAX

இந்நிலையில் IMAX திரைகளில் இந்த RRR படம் திரையிடப்படுகிறது. ​​அதிக வருவாயைப் பெற தயாரிப்பாளர்கள் RRR படத்தை ஐமாக்ஸில் ரீமாஸ்டர் பதிப்பில் வெளியிட முடிவு செய்துள்ளனர். IMAX திரையரங்குகளில் படம் பார்க்க மூன்று மடங்கு அதிக டிக்கெட் கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கின்றன.  இதனால் வசூலும் கூடும்,

IMAX என்பது உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், திரைப்பட வடிவங்கள், ஃபிலிம் ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் தனியுரிமை அமைப்பாகும், இது உயரமான அகண்ட திரைகளுடன் (Aspect Ratio 1.43:1 அல்லது 1.90:1) நிறைய இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய திரைகளைக் கொண்டது.

ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டர் இந்தியாவில் சிறந்த IMAX ஆக உள்ளது. அதன் 72-அடி உயரம், 95-அடி அகல திரை உடன் 635 இருக்கைகள் மற்றும் 12,000-வாட் ஒலி அமைப்பு சிட்னி ஐமாக்ஸ் திரையரங்கிற்கு அடுத்து மிகப்பெரிய IMAX திரை இது தான். உலகின் இரண்டாவது பெரிய IMAX 3D திரை ஆகும். 

தொடர்புடைய இணைப்புகள்

Experience India’s biggest action-drama RRR in IMAX

People looking for online information on Alia Bhatt, Imax, IMAX Ratio, Jr ntr, Raja Mouli, Ram Charan, RRR will find this news story useful.