'நண்பர் கமல்ஹாசனை மருத்துவமனையில் சந்தித்தேன்' - திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக கமல் 60 என்ற பெயரில் பிரம்மாண்ட விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு பிரபலமானது.

DMK Leader MK Stalin tweets about Kamal Haasan

இந்நிலையில் தேவையும் சூழ்நிலையும் அமைந்தால் இணைந்து அரசியலில் இணைந்து செயல்படுவோம் என நடிகர்கள் ரஜினியும் கமலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பி இன்று (நவம்பர் 22) அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கமல் நலமாக உள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பர் 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.