இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட அருண் விஜய்யின் 'சினம்' பட பர்ஸ்ட் லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தடம்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு அருண் விஜய் 'மாஃபியா' படத்தில் நடித்துள்ளார். லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

Director Mani Ratnam released Arun Vijay's Sinam first look

இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து அருண் விஜய் 'நினைத்தாலே இனிக்கும்', 'ஹரிதாஸ்' படங்களின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அருண் விஜய்யின் 30வது படமாக உருவாகும் இந்த படத்துக்கு சினம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மூவி லைட் பிரைவேட் லிமிட்டட் சார்பாக விஜய்குமார் தயாரிக்கும் இந்த படத்தில் அருண் விஜய்யிற்கு ஜோடியாக பலக் லால்வாணி நடிக்கிறார். சபீர் இந்த படத்துக்கு இசையமைக்க கோபிநாத் இந்த  படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். குற்றம் 23 படத்துக்கு பிறகு அருண் விஜய் இந்த படத்தில் போலீஸாக நடித்துள்ளாராம்.