அருண் விஜய்யுடன் குட்டி ஹாசன் நடிக்கும் படத்தில் அவரது கேரக்டர் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசனின் கேரக்டர் லுக் வெளியாகியுள்ளது.

Akshara Haasan's character look poster from Arun Vijay and Vijay antony's Agni Siragugal is unveiled

‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் நவீன் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும், அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 43 நாட்களாக கஜகஸ்தானில் நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங்கை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினர். கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் ‘அக்னி சிறகுகள்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ‘சீனு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் ஸ்டைலிஷ் கேரக்டர் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதைத் தொடர்ந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள அக்ஷரா ஹாசனின் கேரக்டர் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அக்ஷரா ஹாசன் விஜி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.