ஏப்ரல், மே ஆகிய இருமாதங்கள் கோடை விடுமுறை காலம் என்பதால் அந்த இருமாதங்களிலும் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் இருக்கும். அந்த இருமாதங்களும் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகும்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியான படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. அதனைப் போல ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ரோகினி திரையரங்க நிர்வாக இயக்குநர் ரேவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'காஞ்சனா 3' திரைப்படமும், 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படமும் வெளியாகவில்லையென்றால் கடந்த சில வருடங்களை போல மகிச் சிரமமானதாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.
If not for #Kanchana3 and #AvengersEndgame ,This summer has been very poor, one of the worst in the past few years.
— Rhevanth Charan (@rhevanth95) May 26, 2019