தலைவரிடம் வாழ்ந்து பெற்று பாலிவுட்டில் களமிறங்கிய லாரன்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஞ்சனா பட இந்தி ரீமேக்கிற்காக மும்பை சென்றுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், அங்கு ரஜினியை நேரில் சந்தித்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Raghava Lawrence met Rajinikanth at Darbar Shooting Spot

ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்த காஞ்சனா 3 படம் சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இப்படம் மக்கள்ளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் பிசியாகி விட்டார் ராகவா லாரன்ஸ். அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு லக்‌ஷ்மி பாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்பட படப்பிடிப்பு வேலைகளுக்காக மும்பை சென்றுள்ளார் லாரன்ஸ்.

ரஜினியின்  ரசிகரான லாரன்ஸ், தனது ஒவ்வொரு பட வெற்றிக்குப் பிறகும்  அவரை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அது போன்றே இம்முறையும் சந்தித்துள்ளார்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் நிலையில் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் லாரன்ஸ்.