கிரிக்கெட்டர் அபிமன்யூ மற்றும் பேரனுடன் கிறிஸ்துமஸ் Celebration Mode-ல் நடிகை ராதிகா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 09, 2019 11:37 AM
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் கதை எழுதி தயாரித்து வரும் படம் 'வானம் கொட்டட்டும்'. இந்த படத்தை 'படைவீரன்' பட இயக்குநர் தனா இயக்கி வருகிறார்.
![Raadhika Sarathkumar shares a picture with Cricketer Abhimanyu and her Grandson Raadhika Sarathkumar shares a picture with Cricketer Abhimanyu and her Grandson](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/raadhika-sarathkumar-shares-a-picture-with-cricketer-abhimanyu-and-her-grandson-photos-pictures-stills.jpg)
இந்த படத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படத்தில் சரத்குமார், ராதிகா இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இருந்து கண்ணு தங்கம் ராசாத்தி என்ற பாடல் வெளியாகி பிரபலமானது. இதனையடுத்து நடிகர் சரத்குமார், தனது மனைவி ராதிகா முன்னிலையில் கண்ணும் தங்கம் பாடலை பாடி வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது ராதிகா தனது பேரனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடும் ஃபோட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ''இந்த வருடத்தின் விருப்பமான நேரம் கிறிஸ்துமஸ். அபிமன்யூ மிதுன் மற்றும் தாரக் என குடும்பத்துடன் கேக் மேக்கிங்'' என்று பகிர்ந்துள்ளார்.