Maha
www.garudabazaar.com

பிரபல OTTயில் ரிலீசாகும் "ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்".. ரிலீஸ் எப்போ? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் R மாதவனின் “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளது.

R Madhavan Rocketry The Nambi Effect Movie OTT Release Date Announced

Also Read | லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் ஷாருக்கான்.. சமையல் கலைஞர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

“ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி  2022 உலகம் முழுதும் வெளியானது.  இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியானது.

நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , எழுதி, இயக்கியும் உள்ளார்.

R Madhavan Rocketry The Nambi Effect Movie OTT Release Date Announced

கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என முடிவு செய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன்,  உளவுத்துறையால் தேசத்துரோகம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட  பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.

R Madhavan Rocketry The Nambi Effect Movie OTT Release Date Announced

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளனர்.

R Madhavan Rocketry The Nambi Effect Movie OTT Release Date Announced

இந்நிலையில் இந்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது என்று பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | S.J சூர்யாவின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான போஸ்டருடன் வாழ்த்திய 'மார்க் ஆண்டனி' படக்குழு!

தொடர்புடைய இணைப்புகள்

R Madhavan Rocketry The Nambi Effect Movie OTT Release Date Announced

People looking for online information on Madhavan, Rocketry the nambi effect movie, Rocketry The Nambi Effect Movie OTT Release updates will find this news story useful.