Maha
www.garudabazaar.com

S.J சூர்யாவின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான போஸ்டருடன் வாழ்த்திய 'மார்க் ஆண்டனி' படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். 

S J Suriyah Birthday Poster from Mark Anthony Movie

Also Read | லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் ஷாருக்கான்.. சமையல் கலைஞர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .இசை அசுரன் ' ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார்.

S J Suriyah Birthday Poster from Mark Anthony Movie

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. 

S J Suriyah Birthday Poster from Mark Anthony Movie

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்காக பூந்தமல்லி சுந்தர் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக ஒரு செட் அமைக்கப்பட்டு அதில் ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த செட்டில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் சொலல்ப்படுகிறது. இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

S J Suriyah Birthday Poster from Mark Anthony Movie

இந்நிலையில் இன்று நடிகர் S.J. சூர்யாவின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு மார்க் ஆண்டனி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. நியூ & அன்பே ஆருயிரே படங்களை நினைவூட்டும் விதத்தில் நியூ படத்தின் ஸ்டில்லை இணைத்து இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் லுக் நிழல் உருவமாக போஸ்டரில் அமைந்துள்ளது.

Also Read | நேரடியாக OTT-யில் ரிலீசாகும் தமன்னா தனி ஹீரோயினாக நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? தெறி FIRST LOOK!

தொடர்புடைய இணைப்புகள்

S J Suriyah Birthday Poster from Mark Anthony Movie

People looking for online information on Mark Anthony Movie, S J Suriyah, S J Suriyah Birthday, Vishal will find this news story useful.