www.garudabazaar.com

லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் ஷாருக்கான்.. சமையல் கலைஞர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாருக்கான் லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் சமையல் கலைஞர்கள் கூட எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளன.

Shah Rukh Khan with Il Borro London Restaurant Chefs

Also Read | பிரபல நடிகர் நடிகையுடன் மாலத்தீவில் நடிகை இலியானா.. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ADVENTURE வீடியோ!

சில மாதங்களுக்கு முன் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஷாருக்கான் கமிட் ஆனார். ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து DUNKI என்ற இந்த படத்தை தயாரிக்கின்றன.

முன்னாபாய் MBBS,  3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட பல சூப்பர் மெஹா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இந்திய சினிமாவின் டாப் MOST WANTED இயக்குனர் ஆவார்.

Shah Rukh Khan with Il Borro London Restaurant Chefs

Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கவுள்ளார்.  நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், வந்தான் வென்றான், கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தவர். ஹிந்தியில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் துவங்கியுள்ளது. இங்கிலாந்து வாழ் ஷாருக்கான் ரசிகர்கள் மூலம் இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.

Shah Rukh Khan with Il Borro London Restaurant Chefs

வாட்டர்லூ பிரிட்ஜில் ஆற்றங்கரையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த பின் உலகின் மிக விலையுயர்ந்த உணவகமான  IL Borro London உணவகத்திற்கு சென்றார். அங்கு ஷாருக்கான் வந்திருப்பதை கண்ட இந்திய சமையல் கலைஞர்கள் இன்ப அதிர்ச்சி ஆகி ஷாருக்கான் உடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த புகைப்படத்தை சமையல் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்," நீங்கள் ஒரு விஷயத்தை விரும்பினால் இந்த ஒட்டுமொத்த உலகமும் அதை உங்களை அடைய செய்யும்" என ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் பேசும் வசனத்தை எழுதி பதிவிட்டுள்ளார்.

Shah Rukh Khan with Il Borro London Restaurant Chefs

ஷாருக்கானுக்கு அடுத்த ஆண்டு இன்னும் இரண்டு படங்கள் வரவுள்ளன. தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாமுடன் சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடித்துள்ளார், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அட்லீயின் இயக்கட்த்தில் ஜவான் படமும் ஜூன் 2ஆம் தேதி வெளிவரவுள்ளது.

Also Read | நேரடியாக OTT-யில் ரிலீசாகும் தமன்னா தனி ஹீரோயினாக நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? தெறி FIRST LOOK!

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan with Il Borro London Restaurant Chefs

People looking for online information on London Restaurant, London Restaurant Chefs, Shah Rukh Khan will find this news story useful.