www.garudabazaar.com

Pusha : Part 1-ல ‘புஷ்பா-னா ஃபயரு’.. Part 2-ல ட்ரெண்டாகும் மாஸ் பஞ்ச் வசனம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.  இதில் இடம்பெறுள்ள பஞ்ச் வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

Pushpa 2 The Rule Special Glimpse Viral punch dialogue

புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை வசூலித்தது. இப்படத்தின் முதல் பாகத்தில், புஷ்பானா ஃப்ளவர்னு நெனைச்சியா? ஃபயர்ரா என்கிற பஞ்ச் வசனம் பிரபலமானது.

இந்நிலையில் புஷபா டிரைப்படத்தின் 2-ஆம் பாகத்துக்கான கான்செப்ட் டீசர், அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இதில் காடுகளில் புஷ்பா பதுங்கி இருக்கும் காட்சிகளும், முன்னோட்ட இறுதியில் "புஷ்பா ரூலு" என அல்லு அர்ஜூன் பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது. 

குறிப்பாக இந்த பாகத்தில், “காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னால் அடி எடுத்து வெச்சா புலி வந்துடுச்சுனு அர்த்தம், அந்த புலியே 2 அடி பின்னால அடி எடுத்து வெச்சா புஷ்பா வந்துட்டானு அர்த்தம்” என்கிற மாஸான பஞ்ச் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனத்தை அல்லு அர்ஜூனின் ரசிக்ர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Pushpa 2 The Rule Special Glimpse Viral punch dialogue

People looking for online information on Allu Arjun, Pushpa 2, Pushpa The Rise will find this news story useful.