www.garudabazaar.com

"கேரக்டரா மாறுறதுன்னா இதுதான் போல".. அவதார் கதாபாத்திரமான தியேட்டர் ஊழியர்கள்.. Trending!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அவதார்'.

Puducherry theatre staff changed as avatar movie characters

உலக அளவில் சினிமா ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்த இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக, அவதார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தது முதலே, இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கவும் தொடங்கினர்.

அப்படி ஒரு சூழலில், பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவதார் படத்தின் இரண்டாம் பாகமான "அவதார் தி வே ஆஃப் வாட்டர்" திரைப்படம், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று உலக அளவில் பல திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

3 டி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் விஷுவல் காட்சிகள் அனைத்தும் மிகப் பிரம்மாண்டமாகவும், பார்ப்போர் பலரையும் மிரள வைக்கும் வகையிலும் இருப்பதாகவும் ரசிகர்கள் அனைவரும் படம் பார்த்த வியப்பில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து உலக அளவில் அவதார் 2 திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளையும் படைத்து வருகின்றது.

Puducherry theatre staff changed as avatar movie characters

அடுத்தடுத்த நாட்களில் அவதார் 2 திரைப்படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதி வரும் சூழலில், தனியார் திரை அரங்க ஊழியர்கள் செய்த விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

புதுவை - கடலூர் சாலையில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் தனியார் திரையரங்கம் உள்ளது. அங்கே அவதார் 2 திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கே பணிபுரியும் ஊழியர்கள் சிலர், அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல நீல நிறத்தில் வேடம் அணிந்து அங்கே படம் பார்க்க வரும் ரசிகர்களை வரவேற்பதாகவும் தெரிகிறது.

Puducherry theatre staff changed as avatar movie characters

அது மட்டுமில்லாமல் அங்கே வரும் ரசிகர்களுடனும் அவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தை அதிகம் கலக்கி வரும் நிலையில், அவதார் பட ரசிகர்களும் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Puducherry theatre staff changed as avatar movie characters

People looking for online information on Avatar The Way of Water, James Cameron will find this news story useful.