Avatar 2 படத்தில் இருந்து வெளியான Sneak Peek - ப்பா.. பிரம்மிப்பூட்டும் புது உலகம், வேற லெவல் படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. இந்த படம் ஹிந்தி, தமிழ் என பெரும்பாலான இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. 

James Cameron's Avatar 2 Sneak Peek Pictures is Out

அதனைத் தொடர்ந்து தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். இந்த படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் அவதார் படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவதார் 2 படத்தில் நீங்கள் பண்டோராவிற்கு மற்றும் போகப் போவதில்லை. நீங்கள் இன்னும் உலகத்தின் புதிய பகுதிகளை காணப் போகிறீர்கள். என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Entertainment sub editor