www.garudabazaar.com

ரசிகர்களுக்கு Surprise கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்…’அவதார்-2’ படத்தின் Title இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவதார் 2 படத்தின் சில காட்சிகள் நேற்று அமெரிக்காவில் சினிமாகான் நிகழ்ச்சியில் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

James Cameron announced Avatar 2 official Title

’ஷகுந்தலா’வாக ’அழகுப்பதுமை’ சமந்தா... ’தளபதி 66’ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட B’day special Pic!

மோஸ்ட் வாண்டட் இயக்குனர்…

டெர்மினேட்டர் மற்றும் டைட்டானிக் போன்று வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், உலகளவில் புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். அவர் இயக்கிய படங்கள் எல்லாம் உலகளவில் வசூலிலும் விமர்சனத்திலும் சாதனைப் படைத்தன. கடைசியாக் 2009 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான அவதார் 2 திரைப்படம் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வருவாய் ஈட்டி சாதனைப் படைத்தது. அந்த சாதனையை சமீபத்தில்தான் அவெஞ்சர்ஸ் திரைப்படம் முறியடித்தது.

James Cameron announced Avatar 2 official Title

அவதார் அடுத்தடுத்த பாகங்கள்…

அவதார் படத்தின் இமாலய வெற்றியால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த 2020 ஆம்  வருடத்தில் அவதார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.  மேலும், அவதார் 2, 2021ம் ஆண்டு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரனமாக 2022ம் ஆண்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளிவந்தது.

James Cameron announced Avatar 2 official Title

தண்ணீரின் வழி…

இதையடுத்து படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த செய்தி உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அவதார் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவதார் 2 திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ உலகின் மிகப்பெரிய திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பான, தற்போது நடந்துவரும் CInemacon நிகழ்ச்சியில் நேற்று திரையிடப்பட்டது. 3D வடிவில் இந்த காட்சிகள் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் அவதார் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பையும் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார். “AVATAR- The way of water”  என்று இரண்டாம் பாகத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

James Cameron announced Avatar 2 official Title

அடுத்தடுத்த பாகங்கள்…

இந்த படத்தின் டிரைலர் வரும் மே 6 அன்று வெளியாகவுள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தோடு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவதார் முதல் பாகம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் இரண்டு வருட இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ரசிகர்களுக்கு SURPRISE கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்…’அவதார்-2’ படத்தின் TITLE இதுதான்! வீடியோ

மேலும் செய்திகள்

James Cameron announced Avatar 2 official Title

People looking for online information on Avatar 2, Avatar 2 Movie Updates, அவதார் 2, ஜேம்ஸ் கேமரூன், James Cameron will find this news story useful.