www.garudabazaar.com

இயக்குனர் சுதா கொங்கரா வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்.. விலை மட்டும் இத்தனை கோடி ரூபாயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.

Sudha Kongara Bought New Audi Luxury car

Also Read | கேமரா மேனை பார்த்தாலே ROLEX கேங்ல ஒருத்தர் மாதிரி இருப்பாரு 🤣.. 'விக்ரம்' DOP பற்றி கமல் பேச்சு!

இவர் இயக்கிய துரோகி, இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரின் மூன்றாவது படமாக சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை அடுத்து அந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். கதாநாயகியாக ராதிகாமடன் நடிக்கிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது.

Sudha Kongara Bought New Audi Luxury car

சுரரைப் போற்று இந்தி ரீமேக் படத்திற்கு பிறகு KGF 2 மூலம் கவனம் பெற்ற ஹோம்பாலே   நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க  இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Sudha Kongara Bought New Audi Luxury car

இந்நிலையில் சுதா கொங்கரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய முதல் காரில் எனக்கு பிடித்தமான மனிதர்களுடன். பசுமை வாகனத்தில் பயணிப்பது மகிழ்ச்சியானது" என கூறியுள்ளார்.

Sudha Kongara Bought New Audi Luxury car

சுதா கொங்கரா வாங்கியுள்ள இந்த Audi e-tron சொகுசு கார் எலக்ட்ரிக் வாகனமாக செயல்படும். சந்தை மதிப்பில் 1 கோடி ரூபாய் முதல் 1.30 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மணிக்கு 190 கி.மீ வேகத்தில் இந்த காரில் பயணம் செய்ய முடியும். இந்த கார் 71 kwh Battery கொள்ளளவு கொண்டது.

Sudha Kongara Bought New Audi Luxury car

இந்த காரை வாங்கிய பிறகு இயக்குனர் மணிரத்னம், சூர்யா, ஜி.வி. பிரகாஷ் குமார், ராஜசேகர் பாண்டியன், ஆகியோரை சுதா கொங்கரா சந்தித்துள்ளார். மேலும் இந்த காரை நடிகர் சூர்யா ஓட்டும் புகைப்படங்களையும் சுதா கொங்கரா பகிர்ந்துள்ளார்.

 

Also Read | உலக அளவில் ஹிட் அடித்த பாடலுக்கு.. புது லுக்கில் டான்ஸ் ஆடி அசத்திய வேதிகா!

தொடர்புடைய இணைப்புகள்

Sudha Kongara Bought New Audi Luxury car

People looking for online information on Audi Luxury car, Sudha Kongara, Sudha Kongara Bought New car will find this news story useful.