துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' படம் எப்படி இருக்கு ? - ரசிகர்கள் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 22, 2019 03:30 PM
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் 'ஆதித்ய வர்மா'. இந்த படம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை கிரீஸய்யா இயக்கியுள்ளார். இ4 எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை ரதன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்துக்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பனிட்டா சந்து நடிக்க, பிரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் Behindwoods TVக்கு படம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' படம் எப்படி இருக்கு ? - ரசிகர்கள் கருத்து வீடியோ
Tags : Dhruv, Adithya Varma, Radhan, Banita Sandhu