'இதுவரைக்கும் 549 நைட்ஸா ?' - 'ஆதித்ய வர்மா' பட ஸ்நீக் பீக் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  இந்த படத்தை கிரீஸய்யா இயக்கியுள்ளார்.

Dhruv Vikram's Adithya Varma Sneak peek video is out

இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் இருந்து ஸ்நீக் பீக் வெளியாகியுள்ளது.

'இதுவரைக்கும் 549 நைட்ஸா ?' - 'ஆதித்ய வர்மா' பட ஸ்நீக் பீக் வீடியோ இதோ வீடியோ