துருவ்வின் 'ஆதித்ய வர்மா' குறித்து விக்ரம் பட இயக்குநர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 22, 2019 02:15 PM
'இமைக்கா நொடிகள்' படத்துக்கு பிறகு இயக்குநர் அஜய் ஞானமுத்து தற்போது நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். 'விக்ரம் 58' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்ய வர்மா குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து, வலிகளையும் கஷ்டங்களையும் கொடுத்தாலும் ஒரு படத்தின் மீது நாம் எமோஷனலாக இருப்போம். அப்படி ஒரு படமாக விக்ரமிற்கும் துருவிற்கும் ஆதித்ய வர்மா இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு நீங்கள் நிச்சயம் மிகப் பெரிய வெற்றிக்கு தகுதியானவர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.