''உன்னோட அப்பாவ விட நீ....'' - துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்து நடிகர் கார்த்தி ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் 'ஆதித்ய வர்மா' திரைப்படம்  வருகிறத நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரீஸய்யா இயக்கியுள்ளார்.

Karthi Comments about Dhruv Vikram's Adithya Varma

இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த சினிமா துறையில் சிறப்பான பயணமாக அமைய துருவ் விக்ரமிற்கு வாழ்த்துகள். உங்கள் கடின உழைப்பையும், உங்கள் பொறுமையையும் காண போகிறோம்.

ஆதித்ய வர்மா சரியான தேர்வு. அது உன்னை சரியான இடத்துக்கு கொண்டு செல்லும். உனது அப்பாவை விட நீ அதிக இதயங்களை வெல்வாய். இந்த படம் பெரிய வெற்றி பெற ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.