துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ ரிலீஸ் தேதி - விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhruv Vikram's 'Adithya Varma' censored A and release on Nov 21

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கிரீஸய்யா இயக்கியுள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படம் வரும் நவ.8ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் சென்சார் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் வரும் நவ.21ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதித்யா வர்மா’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.