மிஷ்கினின் சைக்கோ பட ’CCTV Missing’ விமர்சனங்களுக்கு பிரபலம் சொன்ன புதிய லாஜிக்!
முகப்பு > சினிமா செய்திகள்திரைப்படங்களில் தனக்கென்று தனித்த பாணியை உருவாக்கிக் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். இலக்கியங்கள் மீதும் திரைப்படங்கள் மீதும் ஆழ்ந்த வேட்கை கொண்டிருக்கும் அவர் தனது நுண் கவனிப்புகளையும் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.
அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’சைக்கோ’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தில் வரும் சைக்கோ கதாப்பாத்திரம் புத்தர்-அங்குலிமாலாவின் கதையை கருவாக கொண்டது என்று மிஷ்கின் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
’யுத்தம் செய்’ படம் முதற்கொண்டே தொடர் கொலை (Serial Killing) சம்பந்தமான கதைகளை நேர்த்தியாக கையாண்டு வரும் அவர் தன் ’சைக்கோ’ படத்தை Master of Suspence என்றழைக்கப்படும் ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக்கிற்கு (Hitchcock) சமர்ப்பணம் செய்திருந்தார்.
சைக்கோ படத்தில் சித்தரிக்கப்பட்ட கொடூர கொலைகள் மற்றும் படத்தின் மையக்கருவான அன்பு ஆகியவை விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டு பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் ஒரு தரப்பினர் படத்தில் கொலை நிகழும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததை விமர்சித்து வந்தனர்.
இது தொடர்பாக நடிகர் உதயநிதி ஸ்டாலி ஒரு வாட்சாப் ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் சர்ச்சைக்குரிய சில அரசியல் பின்னணி நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டு, இவற்றின் சிசிடிவி காட்சிகளை முதலில் கொண்டு வாருங்கள் என கூறப்பட்டிருந்தது.
Just a whatsapp forward msg #psycho #myskkinarmy #cctv #apollo 🙏🏼 pic.twitter.com/RRqFOlhg8v
— Udhay (@Udhaystalin) January 26, 2020