'தடம்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு அருண் விஜய்யின் நடிப்பில் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் 'சினம்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடிக்கும் 'மாஃபியா', நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கும் 'அக்னி சிறகுகள்', அறிவழகன் இயக்கத்தில் 'ஜிந்தாபாத்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கின்றன.

இதில், ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கும் 'சினம்' படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு இன்று முதல் (ஜனவரி 27) தொடங்குவதாக அருண் விஜய் அறிவித்துள்ளார். அந்த பதிவில், ''நீதி கொண்டு கொன்ற போதும்... தீரவில்லை கோபம்... #சினம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சினம் படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் சார்பாக ஆர்.விஜய்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பல்லக் லால்வானி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
“நீதி கொண்டு கொன்ற போதும்..
தீரவில்லை கொள்ளா கோபம்...” #சினம் #cop #Sinam 3rd schedule from today!! @MSPLProductions @gnr_kumaravelan @ShabirMusic @silvastunt @DoneChannel1 pic.twitter.com/DXLYHlScyZ
— ArunVijay (@arunvijayno1) January 27, 2020