மிஷ்கின் - உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' படத்தில் இருந்து மிரட்டலான ஸ்நீக் பீக் வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'சைக்கோ' திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் , இயக்குநர் ராம், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவில் ஒரு கொலையின் பின்னணியில் நிகழும் விசாரணை சம்பவம் அதில் இடம் பெற்றுள்ளது.
மிஷ்கின் - உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' படத்தில் இருந்து மிரட்டலான ஸ்நீக் பீக் வீடியோ இதோ வீடியோ
Tags : Udhayanidhi Stalin, Psycho, Ilaiyaraaja