''உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் பத்தி கேள்வி கேட்கணும்'' - பிரபல ஹீரோயின் விருப்பம்
முகப்பு > சினிமா செய்திகள்மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உருவாகியிருக்கும் படம் 'சைக்கோ' திரைப்படம் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து அதிதி ராவ் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி என தொகுப்பாளர் நிக்கி அவரிடம் கேட்டார். அதற்கு அவர், உதயநிதி சாரிடம் அரசியல் குறித்து கேட்கணும் என்று பதிலளித்தார்.
''உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் பத்தி கேள்வி கேட்கணும்'' - பிரபல ஹீரோயின் விருப்பம் வீடியோ
Tags : Udhayanidhi Stalin, Psycho, Mysskin, Aditi Rao Hydari