மிஷ்கினின் ‘சைக்கோ’ ட்ரெய்லர் - பீதோவனின் இசையில் ஒரு SLASHER
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 08, 2020 01:19 PM
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உருவாகியிருக்கும் படம் 'சைக்கோ'. டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ’உன்ன நெனச்சு’, ’நீங்க முடியுமா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தன்வீர் மிர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெய்லரில் இசை மேதை பீதோவனின் Para Elisa சிம்பொனி இடம்பெற்றுள்ளது.
மிஷ்கினின் ‘சைக்கோ’ ட்ரெய்லர் - பீதோவனின் இசையில் ஒரு SLASHER வீடியோ
Tags : Mysskin, Psycho, Adithi Rao, Ilayaraja, Udhayanidhi Stalin