ஏன் ஷாலினி பாண்டேக்கு பதில் அக்ஷரா ஹாசன் ? - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 24, 2019 09:05 AM
அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் 'அக்னி சிறகுள்'. இந்த படத்தை 'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ஷாலினி பாண்டே முதலில் ஒப்பந்தமாகியிருந்தார். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகே அந்த வேடத்தில் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ''நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதால் 'அர்ஜூன் ரெட்டி' பார்த்து விட்டு ஷாலினி பாண்டேவை ஒப்பந்தம் செய்திருந்தோம். முதலில் 100 நாட்கள் கால்ஷீட் வேண்டும் ஒப்பந்தம் செய்து 27 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.அதனைத் தொடர்ந்து அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தனர். அவர்களை ஒருங்கிணைத்து 40 நாட்கள் நடிக்க வைக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
பிறகு ஷாலினி பாண்டேவை அழைத்த போது தனக்கு ரன்பீர் கபூருடன் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வேண்டியிருப்பதாகவும் தனது கால்ஷீட்டை மாற்றம் செய்து தருமாறு கேட்டார். மீண்டும் அருண் விஜய் - விஜய் ஆண்டனி ஆகிய இருவரையும் ஒரே தேதிகளில் நடிக்க வைப்பது சிரமம் என்பதை எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர் தனக்கு ஹிந்தி படம் தான் முக்கியம் என்றார்.
அதன் பிறகே அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். முதலில் அந்த வேடத்துக்கு இயக்குநர் மனதில் அக்ஷரா ஹாசனை தான் நினைத்திருந்தார். ஆனால் அப்போது அக்ஷரா ஹாசன் பிஸியாக இருந்தார்.
தற்போது ஷாலினி பாண்டே மீது சீட்டிங் கேஸ் ஃபைல் செய்திருக்கறோம். எங்கள் நோக்கம் அவரை காயப்படுத்த வேண்டும் என்பதில்லை. 27 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். அதற்கான பொருட்செலவை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை'' என்று விளக்கினார்.