லண்டனில் இருந்து ‘துப்பறிவாளன் 2’ படக்குழு புதிய அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 22, 2019 10:33 PM
தனித்துவமான திரைமொழியால் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருப்பவர் இயக்குநர் மிஷ்கின். 2017ம் ஆண்டு இவர் விஷாலை வைத்து இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். இது வரும் ஜனவரி 24ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து விஷாலை வைத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி வரும் இவர் லண்டனில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.
இதில் பிரசன்னா, நாசர், கவுத்தமி, ரஹ்மான், முன்னா சைமன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் படக்குழுவினர் லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
& that's a wrap for the Ist leg of the shoot @ UK for #Thupparivaalan2 #Detective2 pic.twitter.com/If8B3hM7Qk
— Vishal Film Factory (@VffVishal) December 21, 2019