இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்கள் ? - தயாரிப்பாளர் ரவீந்தர் கணிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 17, 2019 08:02 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் , Ticket To Finale டாஸ்க் பற்றி அறிவித்தார். அதன் படி இந்த வாரம் நடைபெறும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் அந்த டிக்கெட்டை பெற்று நேரடியாக பைனல்ஸ் போகலாம்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது இந்த வாரம் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், டவுட்டே இல்ல, ஒன்னு ஷெரின், இல்ல லாஸ்லியா என்றார்,
மேலும், டாஸ்க்குகளில் கடுமையா விளையாடுற வனிதாவே வெளியே போயாச்சு. ஷெரின், லாஸ்லியா டாஸ்க் நல்லா விளையாடுறாங்க, ஆனா ஃபைட் பேக் கொடுக்க முடியாது என்றார். பெண்கள் இந்த ஷோவை நடத்தினார்கள், நடத்துவார்கள். முடிப்பார்களா என்பது தான் டவுட்.
இந்த சீசனில் பெண்கள் லவ் சீன் இருந்தது. டான்ஸ் இருந்தது. கிளைமேக்ஸ் மட்டும் தான் காதல் பட கிளைமேக்ஸ் மாதிரி இருக்க போகுது என்றார். தலைவன் கவின் ஆடுறவிதமே வேற மாதிரி இருக்கும் என்றார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்கள் ? - தயாரிப்பாளர் ரவீந்தர் கணிப்பு வீடியோ