”வருமானத்த மட்டும் சொல்றாங்க” - OTTஇல் படம் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் எச்சரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. தற்போது நிலவி வரும் லாக் டவுன் சூழலால் அனைத்து தொழில் நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

Producer Director Arun Kanth on releasing new movie in Amazon Prime OTT exclusive interview | புதிய திரைப்படங்களை OTT அமேசானில் வெளியிடுவதில் உள்ள பிரச்

இந்நிலையில் பொன்மகள் வந்தால் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிப்பு வந்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. திரைப்படங்களை திரையரங்கில் வெளியிட்ட பிறகே இணைய ஒளிபரப்பு ஊடகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும். மீறினால் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்த படமும் தியேட்டரில் வெளியாகாது என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்புக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் எழுந்து விவாதம் அனல் பறந்து வருகிறது. இந்த வரிசையில் இயக்குநரும் தயாரிப்பாளருமான அருண் காந்த் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவர் ’கோக்கோ மாக்கோ’, ’இந்த நிலை மாறும்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்:

தயாரிப்பாளருக்கு முழுத்தொகை வழங்கி அமேசான் நிறுவனம் படத்தை வாங்கினால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால், வருவாய் பகிர்வு முறையில் படத்தை வழங்குவதால் வேறுமாதிரியான பிரச்சினைகள் உருவாகி வருகிறது. பிரைமில் வெளியாகும் படத்தை ஒரு மணிநேரம் பார்வையாளர்கள் பார்த்தால், ப்ரட்யூசரின் கைக்கு எட்டக்கூடிய தொகை 2.80 - 3 ரூபாய் தான் என அவர் குறிப்பிட்டார். இந்த தொகை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமேசான் பிரைம்  நிறுவனம் தான் முழுத்தொகை கொடுத்து வாங்கிய படங்களுக்கு மட்டுமே ட்வீட் போடுவதாகவும், வருவாய் பகிர்வு முறை படங்களுக்கு ட்வீட் இடுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த ட்வீட்டுகளுக்கு பெரிய பார்வையாளர்கள் இருப்பதால் இது இந்த இரண்டு விதமான படங்கள் வருவாய் ஈட்டுவதிலும் பெரிய வேறுபாட்டை உருவாக்குவதாக அவர் கூறினார்

இன்னொரு பக்கம் ப்ரட்யூசர்கள் ப்ரைமுக்கு படம் வழங்குவது தொடர்பாக விளம்பரம் செய்யும்போது அது அந்த OTT நிறுவனத்துக்கும் 50 சதவீத விளம்பரத்தை தந்து விடுகிறது. கூடவே அதிகமாக செலவுசெய்யப்படும் படங்களுக்கே அந்த தளத்தில் முன்னிலை இடம் என அவர் கூறினார்.

பிரைம் படங்கள் வெளியான கால விவரங்கள் தளத்தில் இடம்பெறாததால் பயனாளர்களும், தயாரிப்பாளர்களும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் என தெரிவித்த அவர், மேலும் பல நுணுக்கமான விவரங்களை கீழ்க்காணும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

”வருமானத்த மட்டும் சொல்றாங்க” - OTTஇல் படம் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் எச்சரிக்கை! வீடியோ

Entertainment sub editor