பிரபல தயாரிப்பாளர் வீட்டில் நடந்த சோகம்.. இரங்கல் தெரிவிக்கும் திரைத்துறையினர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தயாரிப்பாளர், தனது அம்மா காலமாகியிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பிரபல தயாரிப்பாளரின் அம்மா காலமானார் | producer dhananjayan's mother passed away

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தனஞ்செயன். மிஸ்டர் சந்திரமௌளி, காற்றின் மொழி, கபடதாரி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இவர், பல படங்களை விநியோகமும் செய்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் பெருமை குறித்து இவர் எழுதிய புத்தகத்திற்காக தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். 

இந்நிலையில் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்'' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து தனஞ்செயனின் தாயார் மறைவுக்கு, நடிகர் பிரசன்னா, கிருஷ்ணா, நடிகை கஸ்தூரி, விஜே ரம்யா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

பிரபல தயாரிப்பாளரின் அம்மா காலமானார் | producer dhananjayan's mother passed away

People looking for online information on Dhananjayan, Mother Passed Away will find this news story useful.