பிரபல நடிகர்கள் மீது வடிவேலு பரபரப்பு புகார்... என்ன நடந்தது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வடிவேலு கடந்த மாதம் 19-ம் தேதி தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் நடிகர் மனோபாலா நடத்தும் யூடியூப் சேனலில் கலந்துகொண்ட சிங்கமுத்து வடிவேலு பற்றி சில கருத்துக்களை கூறியதால் இந்த புகாரை எழுப்புவதாக கூறியுள்ளார்.

பிரபல நடிகர்கள் மீது வடிவேலு பரபரப்பு புகார் Actor vadivelu gives complaint on popular actors ft singamuthu and manobala

அந்த கடிதத்தில் "நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகர்கள் மீது வடிவேலு பரபரப்பு புகார் Actor vadivelu gives complaint on popular actors ft singamuthu and manobala

People looking for online information on , Manobala, Singamuthu, Vadivelu will find this news story useful.