தளபதி விஜய் தரிசனம் எவ்ளோ நேரம் தெரியுமா? - பிகில் அப்டேட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 15, 2019 12:44 PM
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், விவேக், இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு காட்சிகள் நீக்கமின்றி சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாம். மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் என தகவல் கிடைத்துள்ளது.