''பட்ஜெட்டுக்குள்ள பண்ணி படம் சரியா போகலனா...'' - 'பிகில்' தயாரிப்பு தரப்பு விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'பிகில்' டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் பிகில் டிரெய்லரை பாராட்டி ட்வீட் செய்திருந்தனர்.

Archana Kalpathi speaks about Thalapthy Vijay and Atlee's Bigil

குறிப்பாக ஷாரூக்கான், வருண் தவான், கரண் ஜோகர் போன்ற பாலிவுட் ஸ்டார்ஸ் முதல் கோலிவுட் ஸ்டார்ஸ் வரை 'பிகில்' படத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இதன் காரணமாக தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தொகுப்பாளர் அக்னி, இயக்குநர் அட்லி மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு  பதிலளித்த அவர், ''உண்மைய சொல்லணும்னா ஒரு தயாரிப்பாளருக்கு நல்ல படம் வேண்டும். தயாரிப்பு செலவு என்பது அந்த படத்தோட தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடைப்பட்டது. அதனால் நாங்க நம்புறதுனால தான் செலவு பன்றோம்.

தயாரிப்பாளரை மிஞ்சி எந்த இயக்குநராலும் செலவு செய்ய முடியாது. அவர் சிறப்பான படம் ஒன்றை வழங்கியிருக்கிறார். ஒரு பெரிய படம் வேண்டும் என்றால் அதற்காக செலவு செஞ்சு தான ஆகணும். இறுதியா படம் பேசணும். அது ரொம்ப முக்கியம். பட்ஜெட்டுக்குள்ள படம் பண்ணிட்டோம்னு சொல்லி அந்த படம் சரியா போகலைனா அது எங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க போறதில்ல'' என்றார்

''பட்ஜெட்டுக்குள்ள பண்ணி படம் சரியா போகலனா...'' - 'பிகில்' தயாரிப்பு தரப்பு விளக்கம் வீடியோ