“எங்க தியேட்டர்ல 'பிகில்' ஷோ டைமிங் இப்படித் தான் இருக்கும். ஏனெனனில்...?” - பிரபல திரையரங்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. இந்த படத்துக்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என தகவல் கிடைத்துள்ளது.

Vetri Theatre's Rakesh Gowthaman Tweet about Thalapathy Vijay's Bigil

பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா,கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன், ''பிகில் படம் சுமார் 3 மணி நேரங்கள் ஓடக்கூடியது. அதன் காரணமாக வெற்றி திரையரங்கில் காலை 10.45, மதியம் 2.30, மாலை 6.20, இரவு 10.10 ஆகிய காட்சிகளாக திரையிடப்படலாம்'' என்று தெரிவித்துள்ளார்.