Breaking: பிரபல இயக்குநர் படத்தில் மீண்டும் இந்த ஹீரோயினுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 30, 2019 06:38 PM
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து கடந்த மே 17 ஆம் தேதி வெளியான படம் 'மான்ஸ்டர்'. இந்த படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்க, இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்,
இந்த படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
இதனையடுத்து ராதா மோகன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.