"இணை எழுத்தாளர் கூட" மனைவியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து.. AR Rahman போட்ட கேப்ஷன்..
முகப்பு > சினிமா செய்திகள்75 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் நகரில் இன்று (17.05.2022) அமோகமாக தொடங்கி உள்ளது.
இன்று ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெறவுள்ளது. மேலும், இந்த விழாவில், இந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள், திரையிடப்படவுள்ளது. அதே போல, பல நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அந்த வகையில், இந்தியாவின் சார்பில், ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் மாதவன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் படம், நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள, நான் லீனியர் திரைக்கதையில், சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமான இரவின் நிழல் ஆகியவை, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
இசைப்புயலின் லி மஸ்க்
இது போல, இன்னும் சில இந்திய திரைப்படங்கள், திரையிடப்படவுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள 'லி மஸ்க்' என்னும் திரைப்படமும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக, இசை ராஜ்ஜியம் நடத்தி வரும் ஏ.ஆர். ரஹ்மான், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம் மூலம், எழுத்தாளராகவும் அறிமுகமாகி இருந்தார்.
மனைவியின் ஒன் லைன்
இதற்கு அடுத்தபடியாக, ஒரு படத்தை ஏ.ஆர். ரஹ்மான் இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், 'லி மஸ்க்' என்னும் 36 நிமிடம் ஓடக் கூடிய திரைப்படம் ஒன்றின் மூலம், இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். தனது மனைவி சாயிரா பானுவின் ஒன் லைனில் இருந்து, ரஹ்மான் இந்த ஐடியாவை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இணை எழுத்தாளருடன்..
விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், லி மஸ்க் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது. இதுகுறித்த தகவலை, ஏ.ஆர், ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இன்று கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமானதை அடுத்து, தனது மனைவியுடன் கேன்ஸ் விழாவிற்கு செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
மேலும், அதன் கேப்ஷனில், "எனது இணை எழுத்தாளருடன் லி மஸ்க்கிற்காக" என குறிப்பிட்டு, கேன்ஸ் விழாவிற்கு போவதையும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Nayanthara Is Surprised With The Cannes Film Festival 2022 News; Full Details Here
- AR Rahman Debut Direction Le Musk Premiere In Cannes Festival
- AR Rahman Debut Direction Le Musk Premiere In Cannes Festival
- Mani Ratnam And AR Rahman's Ponniyin Selvan Movie Sound Recording At Nungambakkam Studio
- STR, Gautham Menon, AR Rahman's Vendhu Thanindhathu Kaadu First Single Update
- AR Rahman Yuvan Recent Posts Went Viral Regarding Tamil
- AR Rahmans Maajja Oraganising YAALL Music Festival
- AR Rahman Shared Thamizhangu Pic Artist Santhosh Narayanan
- Bharathiraaja Invites R Parthiban AR Rahman Iravin Nizhal Music Launch
- National Award Winning AR Rahman Scoring For Mom The Movie
- National Award Winning AR Rahman Scoring For Mom The Movie
- AR Rahman's Moopilla Thamizhe Thaaye Is A Beautiful Rich Tribute To The Tamil Culture
தொடர்புடைய இணைப்புகள்
- Stalin Sir, நீங்க நிச்சயம் வரணும் 😊 பத்திரிகை வைத்த AR Rahman 🤩 Khatija, Riyasdeen
- സംഗീതസംവിധായകൻ എ.ആർ.റഹ്മാന്റെ മൂത്ത മകളും ഗായികയുമായ ഖദീജ വിവാഹിതയായി
- മകളുടെ വിവാഹം ഗംഭീരമാക്കി AR Rahman. ❤️ AR Rahman Daughter Reception Video 💞.
- அடடா 😍 ஜோடி பொருத்தம் அள்ளுதே ❤️ AR Rahman Daughter Reception Video 💞 Khatija, Riyasdeen
- ക്ഷുഭിതനായി കാണികൾക്കിടയിലേക്ക് മൈക്ക് വലിച്ചെറിഞ്ഞ് നടൻ പാർത്ഥിപൻ. സത്യത്തിൽ നടന്നതെന്ത്?
- Tension ஆகி Mic எறிந்த Parthiban... "AR Rahman கிட்ட வர 20 வருஷம் ஆயிடுச்சு" | Iravin Nizhal Event
- "இதானா ! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீங்க கொடுக்குற சுதந்திரம்..?" | A R RAHMAN | HINDI IMPOSITION | #shorts
- "எங்க தமிழ் தாயை இப்படி பேய் போல வரையலாமா ?"| சர்ச்சையான தமிழன்னை விவகாரம்'| #shorts
- "இந்தி வேண்டாம்ன்னு சொல்லல... திணிக்காதீங்கன்னு சொல்றோம்!"-சர்ச்சையான தமிழன்னை விவகாரம்| A R RAHMAN
- "இந்தி UNITY யை கொடுக்கும்ன்னு எப்படி நம்புறீங்க ?"| A R RAHMAN | #shorts
- "தமிழனுக்கு இந்தியே அந்நிய மொழிதான் !"- 'சர்ச்சையான தமிழன்னை விவகாரம்' | A R RAHMAN | DIGITAL DEBATE
- "தமிழன்னைய கருப்பா காட்டி அசிங்கப்படுத்தாதீங்க..!"- 'சர்ச்சையான தமிழன்னை விவகாரம்' | A.R.RAHMAN