“ரெண்டு நாளைக்கு No ஃபோன்… No இண்டர்நெட்”… என்ன சொல்றாரு A.R.ரஹ்மான் வைரலாகும் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

A R ரஹ்மான் பகிர்ந்துள இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

AR Rahman latest Desert post getting viral

Also Read | மாஸ் Stylish லுக்கில் விஜய் சேதுபதி… வைரலாகும் ‘விக்ரம்’ படத்தின் புதிய BTS புகைப்படம்

இசைப்புயல்…

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராகக் கருதப்படும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அதிகளவில் இந்திய படங்களுக்கு இசையமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தற்போது அவர் இசையில் கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் இறுதி நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் செய்த இசைக்கச்சேரி பெரிய அளவில் கவந்த்தை ஈர்த்தது.

AR Rahman latest Desert post getting viral

பாலைவனப் புகைப்படம்…

இந்நிலையில் இப்போது ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது. பாலைவனத்தில் ஒட்டகங்கள் கூட்டமாக நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரஹ்மான், மேலும் “இன்னும் இரண்டு நாட்களுக்கு ஃபோன் இல்லை. இண்டர்நெட் கிடையாது. ஒட்டகங்களும் ஆடுகளும்தான் நண்பர்கள். #aadujeevitham” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

AR Rahman latest Desert post getting viral

ஆடுஜீவிதம்…

ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கிறார். பிளஸ்சி இயக்குகிறார். கேரளாவில் இருந்து சவுதி அரேபியா வேலைக்கு சென்று பாலைவனத்தில் சிக்கிக்கொள்ளும் நஜீப் என்பவரின் கதையை பேசும் படமாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற படக்குழு கொரோனா பொதுமுடக்கத்தின் போது பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டிய சூழல் உருவானது.

AR Rahman latest Desert post getting viral

இந்த திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ என்ற பெயரில் பென்யாமின் எழுதிய நாவலை தழுவி உருவாக்கப்படுகிறது. ஒருவேளை இந்த படத்தின் இசைப் பணிகளுக்காக ரஹ்மான் பாலைவனப் பகுதிகளுக்கு சென்றிருப்பாரோ என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் அடுஜீவிதம் திரைப்படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | பாடகர் KK பாடிய கடைசி தமிழ் பாடல்… ‘தி லெஜண்ட்’ பட இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman latest Desert post getting viral

People looking for online information on AR Rahman, AR Rahman latest Desert post will find this news story useful.