நயன்தாரா - பிரித்வி ராஜ் இணையும் புதிய படம்.. அல்போன்ஸ் புத்ரன் போட்ட வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

Nayanthara Prithviraj Alphonse Puthren GOLD Movie Latest Update

Also Read | “ராஜா கைய வச்சா… அது “… ‘Stranger Things’ meets இசைஞானி… வைரல் வீடியோ

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Nayanthara Prithviraj Alphonse Puthren GOLD Movie Latest Update

முன்னதாக அல்போன்ஸ், ஃபஹத் ஃபாசிலுடன் பாட்டு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக பாட்டு படம் தள்ளிப்போகி உள்ளது. இந்த கோல்டு படத்தின் படப்பிடிப்பும் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக கேரள மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Nayanthara Prithviraj Alphonse Puthren GOLD Movie Latest Update

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் "GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட படத்தொகுப்பு பணிகள், கிராபிக்ஸ், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என டிவிட்டரில் கூறியுள்ளார்.

Nayanthara Prithviraj Alphonse Puthren GOLD Movie Latest Update

Also Read | ‘சுவாசமே சுவாசமே தேடல் இன்று… ’ SR பிரபு தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் ‘O2’ first single

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Prithviraj Alphonse Puthren GOLD Movie Latest Update

People looking for online information on Alphonse Puthren, Gold Movie, GOLD Movie Latest Update, Nayanthara, Prithviraj will find this news story useful.