www.garudabazaar.com

முழு டபுள் ஆக்சன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன மாஸான பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன்,  'PRINCE' படத்தின் ரிலீஸை ஒட்டி டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Prince SivaKarthikeyan answer about Doing double action film

Also Read | Bigg boss 6 tamil : ஒருவழியா ஜிபி முத்துவை அழைத்து பேசிய பிக்பாஸ்.. Confession ரூமில் நடந்த பரபரப்பு உரையாடல்.!

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ளார்.

இந்த ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.

Prince SivaKarthikeyan answer about Doing double action film

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

Prince SivaKarthikeyan answer about Doing double action film

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன், டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர், "எப்போது ரசிகர்கள் உங்களிடம் இருந்து முழு நீள இரட்டை வேட திரைப்படத்தை எதிர்பார்க்கலாம்?" என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "இரட்டை வேடத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதற்கு தகுந்த கதை அமையும் போது கண்டிப்பாக பண்ணுவேன். இரட்டை வேடத்தில் நடிக்க தான் காத்திருக்கிறேன்" என சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

 

Also Read | "இப்பவும் அப்படியே இருக்கார்".. விஜய்யை சந்தித்த பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்! வைரல் ட்வீட்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prince SivaKarthikeyan answer about Doing double action film

People looking for online information on Prince, Sivakarthikeyan will find this news story useful.