www.garudabazaar.com

"இப்பவும் அப்படியே இருக்கார்".. விஜய்யை சந்தித்த பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்! வைரல் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை பிரபல இயக்குனர் & நடிகர் சந்தித்துள்ளார்.

Actor Manobala viral Tweet about Varisu Vijay

Also Read | "கோபி ஓட்டுன ரீலு அந்து போச்சுடோ".. ஃபேமிலி முன்னாடி பல்பு!!.. பத்ரகாளியான ராதிகா!!

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

Actor Manobala viral Tweet about Varisu Vijay

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Actor Manobala viral Tweet about Varisu Vijay

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  

Actor Manobala viral Tweet about Varisu Vijay

தீபாவளி விடுமுறை கழித்து வாரிசு படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அக்டோபர் மாதத்துடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாரிசு படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், தளபதி விஜய்யை வாரிசு பட செட்டில் சந்தித்தேன். அற்புதமான தருணம் அது. இப்பொழுதும் அவர் அப்படியே இருக்கார். அவர் நடனம் ஆடும் போது அதிகப்படியான ஆற்றல் கிடைக்கிறது. அவருடன் 15 நிமிடங்கள் உரையாடினேன். அதனால் அவரிடமிருந்து புத்துணர்ச்சியுடன் ஆற்றலும் எனக்கு கூட கொஞ்சம் கிடைத்தது" என நடிகர் மனோபாலா ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | Bigg boss 6 tamil : ஒருவழியா ஜிபி முத்துவை அழைத்து பேசிய பிக்பாஸ்.. Confession ரூமில் நடந்த பரபரப்பு உரையாடல்.!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Manobala viral Tweet about Varisu Vijay

People looking for online information on Arun Vijay, Manobala, Manobala Tweet about Varisu Vijay, Varisu will find this news story useful.