www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? அட்டகாசமான மேக்கிங் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின்  மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Prince Movie BTS Making Video Trailer Update

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

SivaKarthikeyan Prince Movie BTS Making Video Trailer Update

இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நாளை ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக மேக்கிங் வீடியோவுடன் சிவகார்த்திகேயன் தோன்றி அறிவித்துள்ளார்.

SivaKarthikeyan Prince Movie BTS Making Video Trailer Update

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 'ப்ரின்ஸ்' படம் வரும் தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் 'வலிமை' படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie BTS Making Video Trailer Update

People looking for online information on Prince, Prince Trailer, Sivakarthikeyan, SK will find this news story useful.